முக்கிய செய்திகள்

உணவு பொருள் பணவீக்கம் 9.5 சதவீதமாக குறைந்தது

Food-Inflation2

 

புதுடெல்லி. ஏப்ரல்.1 - நாட்டின் உணவு பொருள் பணவீக்கம் 9.5 சதவீதமாக கறைந்துள்ளது.

நாட்டின் உணவு பொருள் பணவீக்கம்  கடந்த மார்ச் 12 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.5 சதவீதமாக இருந்தது. இது கடந்த மார்ச் 19 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இரட்டை இலக்கத்திலிருந்து  கீழே இறங்கி 9.5 சதவீதமாக  ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது..

எரி பொருட்களின் விலை 13.13  சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரதான பொருட்களின் விலைகள் 12.98 சதவீதமாக குறைந்துள்ளன.

முட்டை,  முக்கிய உணவு பொருட்கள் வாசனை திரவியங்களின் விலைகள் சற்று  குறைந்துள்ளன.மீன், கோதுமை, பழங்கள்,காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளன. ராகி,  சோளம், கறிக்கோழி ஆகியவற்றின் விலைகள்  சற்று உயர்ந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: