எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், ஜூலை6 -250 ஆண்டுகளுக்கு பிறகு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று காஞ்சிபுரம் தேவராஜசுவாமி (ஸ்ரீவரதராஜபெருமாள்) திருக்கோவில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சுவர் ஓவியங்கள் பழமையான கல்வெட்டுக்கள் போன்றவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் 2 ராஜகோபுரங்கள், பல சிறிய கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டுள்ளது. முதலாம் ராஜராஜசோழனால் கி.பி.1018 -1054ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
காயத்திரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் 24 படிகள் கொண்ட அஸ்தகிரி என அழைக்கப்படும் திருமலையில் புண்ணியகோடி விமான மத்தியத்தில் நின்ற திருக்கோலத்தில் மூலவர் எம்பெருமாள் காட்சி தருகிறார். மேலும் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 ஏக்கர். கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் படிகட்டுகள் 24. கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24. மதில் சுவரில் உள்ள கற்களின் அடுக்குகள் 24 ஆகும். கோவில் வளாகத்தில் 14 ஏக்கர் பரப்பில் 3 தோட்டங்கள் உள்ளன. அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரை என்ற 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகைகள் பெருமாளுக்கு சொந்தமாக உள்ளன. பெரிய தேர், 45 சிலைகள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளன. தற்போது இந்த கோவிலில் 5 கால பூஜை நடந்து வருகிறது.
இப்படி பல வரலாற்று சிறப்புகளையும் புகழையும் பெற்ற இந்த கோவிலில் முழுமையாக கும்பாபிஷேகம் நடந்து 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே மனக்குறைவை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்த குறையை போக்க வரதராஜ பெருமாள் கோவிலில் முழுமையாக திருப்பணி செய்ய கடந்த 2007ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிதியை வைத்தும் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாய் நிதியை வைத்தும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்தேவி தாயார் சன்னதிக்கு தங்க விமானம் உருவாக்கும் திருப்பணி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், கிழக்கு ராஜ கோபுரம் மற்றும் மேற்கு ராஜ கோபுர திருப்பணிகள் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும் 100 கால் மண்டபம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டன. கோவில் கிழக்கு ராஜகோபுர வாசல் 150 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு புதிய வாசல் கதவுகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளன.
அதுமட்டும் அல்லாமல் மூலவர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. திருப்பணிக்கான மொத்த மதிப்பீடு சுமார் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததாகவும் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ந்தேதி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று 5-ந்தேதி காலை 11 மணிக்கு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்) வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பாபிஷேக அங்குரார்ப்பணம் நடந்தது. 2-ந்தேதி முதல் 5ந்தேதி வரை 4 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடந்தன. பூஜையில் அமிர்தவள்ளி தாயார் எம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புரணாஹுதி தீர்த்தம் சடாரி 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் நாள் யாகசாலை பூஜை தொடங்கியது. ஸ்ரீபெருமாள் நித்யபடி திருவாராதனம் நிவேதனம் நடந்தது. 8 மணிக்கு ஸ்ரீபெருமாள் ஸ்ரீதாயார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு துவார கும்ப மண்டல திருவாராதனம் நிவேதனம், பெருமாள் திருவாராதனம் ஹோமங்கள் நடந்தன. 10.30 மணிக்கு மஹா பூரணாஹுதி யாத்ராதானம் கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேற்கு ராஜ கோபுரம் கிழக்கு ராஜ கோபுரம் தாயார் தங்க விமானம் புண்ணியக்கோட்டி விமானம் 100 கால் மண்டபம் மூலவர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்பொது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி வரதா... காஞ்சி வரதா... கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பெருமாள் தாயாருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் நிவேதனம் வேதப்ரபந்த சாத்துமறை தீர்த்தம் சடாரி கோஷ்டி ஆகியவை நடந்தன. மாலையில் கோவில் மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இரவு பெருமாள் திருமலைக்கும் தாயார் சன்னதிக்கும் எழுந்தருளினர்.
ஸ்ரீஅஹோபில மடம் செலவு ஏற்பு!
கும்பாபிஷேகத்திற்கான அனைத்து செலவுகளையும் ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், மத்திய எஃக்கு வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஸ்ரீஅஹோபில மடம் 45வது பட்ட ஜீயரின் பேரன்கள் சேஷாத்திரி சம்பத் வரதராஜன் வக்கீல்கள் வாசுதேவன் ரேவதி, அதிமுக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.ரங்கநாதன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், அத்திவாக்கம் எஸ்.ரமேஷ், ராஜசிம்மன், தென்னேரி என்.எம்.வரதராஜுலு, படுநெல்லி வி.தயாளன், தொழிலதிபர்கள் எம்.வி.எம்.பி.அப்பர், வி.கே.தாமோதரன், ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், வி.பன்னீர்செல்வம், கவிஞர்.கூரம்.துரை, மெடிக்கல்.பி.தீனா, கே.வீரராகவன், கோவில் நிர்வாக அதிகாரிகள் பு.மு.வேதமூர்த்தி, கண்ணபிரான் வேலரசு வி.கே.சரவணன் உள்பட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் ப.ராஜா காஞ்சீபுரம் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான என்.தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் நன்கொடையாளர்கள் பக்தர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கணேசமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் ஆகியோர் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு வி.பாஸ்கரன், துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் வேலூர் ஆகிய 6 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உள்ளூர் அரசு விடுமுறை!
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (5.7.12) ஒரு நாள் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 14ந்தேதி பணி நாளாக அறிவித்து கலெக்டர் ஹனீஷ்சாப்ரா உத்தரவிட்டிருந்தார்.
உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தது. ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அர்ச்சகர்களை கொட்டிய தேனீக்கள்:
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த கிழக்கு ராஜ கோபுர (பின்பக்க கோபுரம்) கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்காக அர்ச்சகர்கள் தேவராஜன் சேஷாத்திரி ஆகியோர் புனித நீர் கொண்ட கலச கும்பங்களை தூக்கிக் கொண்டு கிழக்கு ராஜ கோபுரத்தின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் 5-வது நிலை உள்பகுதியில் இருந்த தேனீக்கள் அர்ச்சகர்களை பயங்கரமாக கொட்டியது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் அர்ச்சகர்கள் கோபுரத்தின் மீது ஏறி கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு கீழே இறங்கி வந்த அவர்கள் தங்களை தேனீக்கள் கொட்டியது குறித்து சக அர்ச்சகர்களிடமும் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தியிடமும் தெரிவித்தனர். பிறகு அவர்கள் மருத்துவ குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மருத்துவக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக அரசு அறிவிப்பு
16 Jul 2025சென்னை, நீர் நிலைகள், பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் ஜூலை 8ம் தேதி முதல் சட்டத் திருத்தம் அ
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் 19-ம் தேதி ஆன்லைன் மூலம் வெளியீடு
16 Jul 2025திருப்பதி : திருப்பதி கோவிலில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வருகிற 19-ம் தேதி ஆன்லைனில் வெளியீடு
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.