முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வர இந்தியா தடை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 29 - ஈரானிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.்ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இத்தடையைப் பின்பற்றுமாறு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு சவூதி அரேபியா பக்கம் திருப்பியிருக்கிறது. 

இந்நிலையில் ஈரானிலிருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுவர இந்தியா முழுவதும் தடைவிதித்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மேலாண்மை இயக்குனர் உபாத்யா, ்ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபடி கச்சா எண்ணெயை எங்களால் இறக்குமதி செய்ய முடியவில்லை. ஜூலை மாதத்தில் 4 கப்பல்களில் எண்ணெயை இறக்குமதி செய்யவிருந்தோம். ஆனால், இதுவரை ஒரு கப்பலில் மட்டுமே எண்ணெய் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கப்பலுக்கான போக்குவரத்துச் செலவு, இன்சூரன்ஸ் ஆகியவற்றை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதே இதற்கு காரணம் என்றார். இதனால் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முற்றாக நிறுத்தி விட்டதாகவே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!