முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி சுஷில் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஆக. - 13  - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆட வருக்கான 66 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான சுஷில் குமார் வெள் ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.  இது இந்தியாவிற்கு 30- வது ஒலிம்பிக் கில் கிடைத்த 6- வது பதக்கமாகும். மல்யுத்தத்தில் இது 2-வது பதக்கமாகு ம். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் யோகேஸ்வர் தத் 60 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார்.  ஆடவருக்கான 66 கிலோ எடைப் பிரிவிற்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டி நேற்று மாலை இந்திய நேரப் படி 6. 00 மணிக்கு நடந்தது.
இதில் இந்திய முன்னணி வீரரான சுஷி ல் குமாரும், ஜப்பான் ராணுவ வீரர் டட்சுகிரோ யொனேமிட்சுவும் பலப் பரிட்சை நடத்தினர். பரபரப்பான இந் தப் போட்டியில் ஜப்பான் வீரர் 3 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெ ற்று தங்கத்தைக் கைப்பற்றினார்.  இந்திய வீரர் சுஷில் குமார் 2-வது இடத் தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்த ஒலிம் பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
முன்னதாக நடந்த அரை இறுதியில் குமார் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக் கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக் கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது. இதன் மூலம் அவர் புதிய வரலாறை படைத்தார்.  அரை இறுதியில் இந்திய வீரர் குமார் கஜகஸ்தான் வீரர் அக்சுரெக் டனாட்ரோவுடன் மோதினார். இதில் அபாரமாக சண்டையிட்ட குமார் 3- 1 என்ற புள்ளிகள் கணக்கில் கஜக் வீரரை தோற்கடித்தார்.  இந்த வெற்றியின் மூலம் அவர் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு நம்பிக்கை அளி த்தார். மல்யுத்தத்தில் குமார் வெளிப்ப டுத்திய திறமையால் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவானது.  பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார், இந்த ஒலிம்பிக்கி ல் துவக்க நாளன்று இந்திய அணிக்கு தலைமை தாங்கி கொடியை ஏந்திச் சென்றார்.  லண்டன் ஒலிம்பிக்கில் சுஷில் சிறப்பா க சண்டையிட்டதுடன், நல்ல தொழில் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தினார். தவிர, அவரது ஸ்டாமினாவும் வியக்கு ம் வகையில் இருந்தது. எதிரணி வீரர்க ளை திணறவைத்தார்.  சுஷில் குமார் இதற்கு முந்தைய சுற்றுக் களில் துருக்கி வீரரும், நடப்பு சாம்பிய னுமான ரமாஜான் சாகின், உஸ்பெக் வீரர் இக்டியார் ஆகியோரை வீழ்த்திய து குறிப்பிடத்தக்கது. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கமும், மல்யுத்தம் மற்றும் குத்துச் சண்டையில் வெண்கலமும் கிடைத்தது.  லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மொத்தம் 6 பதக்கம் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவ ரை இந்தியா பெற்ற அதிக பதக்கம் இந்த ஒலிம்பிக்கில் தான்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago