முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்31சின்சினாட்டி டென்னிஸ் போட்டி பெடரர் வெற்றி, முர்ரே தோல்வி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

சின்சினாட்டி, ஆக. - 18 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே தோல்வி அடைந்தார். ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை ஏ.டி.பி. மற்றும் டபிள்யு.டி.ஏ. ஆகிய இரண்டு சங்கமும் இணைந்து அமெரிக்காவில் வெகு விமர்சை யாக நடத்தி வருகின்றன.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களம் இறங்கி உள்ளனர். இந்த ப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. இதன் 2 -வது சுற்றுப் போட்டி நடந்தது. இதில் சுவிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரும், ஆஸி. இளம் வீரர் பெர்னா ர்டு டாமிக்கும் மோதினர். இதில் அனுபவமிக்க பெடரர் சிறப்பாக ஆடி எளிதான வெற்றியைப் பெற்றார். அவர் 6 -2, 6 -4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரரை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவும், பிரான்ஸ் வீரர் ஜெரேமி சார்டியும் மோதினர். இதில் முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இறுதியில் பிரான்ஸ் வீரர் சார்டி, 6 - 4, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்தப் போட்டி சுமார் 1 மணி மற்றும் 10 நிமிடத்தில் முடிந்தது. இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒலிம் பிக் மற்றும் சின்சினாட்டி போட்டியில் நடப்பு சாம்பியனாவார் என்பது குறிப் பிடத்தக்கது. 

ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அவர் டொராண்டா போட்டியில் முதல் சுற்றி ல் மட்டும் பங்கேற்றார். பின்பு முழங் கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். 

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மர்டி பிஷ்சும், செக். வீரர் ரேடக் ஸ்டீ பானெக்கும் மோதினர். இதில் மர்டி 6-3, 6- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago