முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 5 வருட காலமாகவே முதல்வராக கருணாநிதி இருக்கிறாரா- சீமான் ஆவேச பேச்சு

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஏப்.- 5 - முதல்வராக கருணாநிதி இருக்கிறாரா என்ற சந்தேகம் கடந்த 5 வருட காலமாகவே மக்களிடம் நிலவுகிறது என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.  சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில், ஓர் இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சியை நாம் முற்றிலுமாக அழிப்போம். இந்த ஆட்சியை மாற்றும் போராட்டம் இது. தி.மு.க.வோ, காங்கிரஸ் கட்சியோ இந்த தேர்தலை பணம் கொடுக்காமல் சந்திக்குமா? இப்போது கூட்டங்களில் பேசும் கருணாநிதி, நான் முதல்வரா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. காவல்துறை எனது பேச்சை கேட்பதில்லை என்கிறார். சுதந்திரமாக வேலை செய்யும் அவர்களுக்கு ஆட்சி மாற்றம் வந்து விட்டது என்று இப்போதே தெரிந்து விட்டது. 

முதல்வருக்கு இப்போதுதான் தான் முதல்வராக இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகம் வந்துள்ளது. ஆனால் தமிழக மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சிவாஜி, ரஜினி குடும்பத்தினர் சினிமா துறையில் இருக்கிறார்கள். ஆனால் சினிமா துறையே உங்கள் குடும்பத்திடம் இருக்கிறது. சினிமா துறையை சேர்ந்த ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். அவர்களது பிரதிநிதியாகத்தான் நான் களமிறங்கி இருக்கிறேன் என்றார். முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ஊழல்வாதிகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை மாற்ற இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago