முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமானுவேல் சேகரன் நினைவுநாள் அதிமுக சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 12 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

பரமக்குடி,செப்.- 12 - பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் , தமிழக தலைவர்கள் பல்வேறு கிராம மக்கள் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 7 மணி அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி துவங்கியது. சொந்த ஊரான செல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் கைத்தறி துறை அமைச்சர் சுந்தரராஜன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராசு ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், அன்வர்ராஜா, முருகன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் சுந்தரபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகேசன், உட்பட நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. , ம.தி.மு.க. சார்பில் கணேசமூர்த்தி எம்.பி. பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் நாகராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மள்ளர் கழகம் சார்பில் சுப.அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் தலைவர் சீமான், பா.ம.க. சார்பில் தலைவர் கோ.க.மணி, தேமுதிக பாண்டியராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜான்பாண்டியன் பல்வேறு அரசியல் அமைப்புக்கள், பல்வேறுகிராமங்கள் சார்பில் பால்குடம் முளைப்பாரி ஆகிய எடுத்து வரப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago