முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் கைதிகளை அடுத்த வாரம் இந்தியா விடுதலை செய்கிறது

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      இந்தியா
pak 5

 

புதுடெல்லி, ஏப்.- 11 - இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் இருக்கும் பாகிஸ்தான் கைதிகள் மற்றும் மீனவர்களை அடுத்த வாரம் விடுதலை  செய்ய  மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரபிக்கடலில் மீன் பிடிக்கும் இநதிய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள்  அடிக்கடி தங்கள் நாட்டு எல்லைக்கு அப்பால் சென்று விதிகளை மீறி மீன்பிடிப்பதால் அவர்களை இரு நாடுகளே கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை விடுதலை செய்ய இந்திய அரசு முன் வந்துள்ளது. அதன்படி  இந்தியாவில் சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் மீனவர்கள் 29 பேரை  அடுத்த வாரம் 25 ம் தேதி விடுதலை  செய்ய மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.

 இதற்கு  பதிலாக பாகிஸ்தான்  சிறைகளில் உள்ள 100 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய  பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் இந்த நடவடிக்கையே  மேற்கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே  தகவல்களை பரிமாறிக்கொள்வது என்ற திட்டத்தின் கீழ்  இரு நாடுகளின் அதிகாரிகளும் தகவல் பரிமாற்றங்களை  செய்து வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து 29 பாகிஸ்தான் கைதிகள் வருகிற 15  ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்களின் தண்டனை காலம் முடிவடைந்து விட்டதால் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளிலும் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை இரு நாடுகளின் அதிகாரிகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: