முக்கிய செய்திகள்

அச்சுதானந்தன் கிண்டல் - பதில் அளிக்க பிரணாப் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
pranab

கொல்கத்தா,ஏப்.12 - ராகுல் காந்தி ஒரு அமுல் பாய் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கிண்டல் அடித்திருப்பது குறித்து பதில் அளிக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.  கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கொச்சியில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அச்சுதானந்தனுக்கு தற்போது 87 வயதாகிறது. கேரளாவில் மீண்டும் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர்தான் முதல்வராக வருவார். அப்படி வந்தால் அவருக்கு 92 வயதாகும் வரை முதல்வராக இருப்பார். அப்போது அச்சுதானந்தன் மிகவும் வயதானவராக இருப்பார் என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அச்சுதானந்தன் ராகுல் காந்தி ஒரு அமுல் பாய். அவர் அமுல் பாயாக இருப்பதால்தான் கேரளாவில் அமுல் பாய்களுக்காக விளம்பரம் செய்ய வந்தார் என்று கிண்டலாக கூறினார். இதுகுறித்து நேற்று கொல்கத்தா வந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டதற்கு அநாகரீகமான கருத்துக்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: