எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.13 - தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மிகவும் பதட்டமான 26 தொகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம் முறைகேடுகளை தடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோர் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், அருண் ஜேட்லி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத், டி.ராஜா, ஏ.பி.பரதன் ஆகியோர் தமிழகம் வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வந்து வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் 100 சதவீதம் கச்சிதமாக செய்து முடித்து விட்டது. வாக்கு சாவடிகளுக்கு தேவையான மின்னணு எந்திரம், அடையாள மை, மற்றும் எழுது பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார்.
சென்னை நகரில் நடைபெறும் தேர்தல் குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் 3236 பூத்துகள் உள்ளன. 266 மண்டலங்களாக இவைகள் பிரிக்கப்படும். 1 மண்டலத்திற்கு 1 அதிகாரி பொறுப்பாக இருப்பார். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. இரவு பகலாக அதிகாரிகள் டூட்டியில் இருப்பார்கள். வாக்குப் பதிவு முடிந்து இரவு மின்னணு எந்திரங்களை அனுப்பும் வரை டூட்டியில் இருப்பார்கள் என்றார்.
வாக்குசாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று இரவுக்குள் போய் சேர்ந்து விடும். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. 1100 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 500 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனில்தான் அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று ஓட்டுப்பதிவுக்கு தேவையான இதர பொருட்களை பெற்றுக் கொண்டு, இன்றே ஓட்டுச்சாவடிக்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்காமிரா மூலம் படம் பிடித்து இணையத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு முழுமையாக படம் பிடிக்கப்படும். இவை தவிர சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில போலீசாருடன் சுமார் 25 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். முக்கிய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரதடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் நபர்களால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்க நேற்றிரவு முதல் திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நலக் கூடங்களில் சோதனை நடந்து வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு நூதனமான வழிகளில் பணம்பட்டு வாடா செய்யப்பட்டு விடலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வாரி, வாரி வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. என்றாலும் குறிப்பிட்ட 26 தொகுதிகளில் பணம் பட்டுவாடா மிக, மிக அதிக அளவில் நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் கள் வந்துள்ளன. இந்த 26 தொகுதிகளிலும் இன்றிரவு பணபட்டுவாடா தீவிரமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த 26 தொகுதிகளிலும் கூடுதல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆதாரப்nullர்வமாக தகவல்கள் தரும் பட்சத்தில் தேர்தலை ரத்து செய்யவோ, அல்லது தேர்தலை ஒத்தி வைக்கவோ உயர் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 தொகுதிகளும் எவைஎவை என்ற தகவலை தெரிவிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். சென்னையில் கொளத்தூர் தொகுதி இந்த கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் மொத்தம் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 லட்சம் பேர் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள். இவர்களில் சுமார் 50 லட்சம் பேர் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள nullத்சிலிப் இரண்டில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு nullத் சிலிப் கொடுக்கப்பட்டு விட்டது. nullத்சிலிப் கிடைக்காதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் இன்றே தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவ டையும். அதன் பிறகு மின் னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். அடுத்த மாதம் (மே) 13ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
21 Jul 2025சென்னை, மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டின் அடுத்த டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் பணிகள் துவக்கம்
21 Jul 2025சென்னை, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.