முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களை பழி வாங்குகிறது டெல்லி: முதல்வர் கடும் தாக்கு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.28 - தமிழ்நாடு கேபிள் டி.வி.க்கு உரிமம் தராமல், மத்திய அரசில் இடம் பெற்றுள்ள குடும்பத்திற்கு சாதகமாக மத்திய அரசு எங்களை பழி வாங்குகிறது என்று புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி பேசினார். சாதாரண வேண்டுகோளான சென்னை நகரத்திற்கு தொலைக்காட்சி ஒளிப்பரப்பை டிஜிட்டல் மயமாவதற்கு இதுவரை உரிமம் தரவில்லை. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் குறைந்த விலையில் மக்களுக்கு தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்ப தயாராக உள்ளது. குறிப்பிட்ட குடும்பத்தின் டிவி நெட்வர்க்கிற்கு சாதகமாக செயல்படும் வகையில் செயல்படுகிறது. மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரு குடும்பத்தின் நலனுக்காக தமிழ்நாடு கேபிள் டிவி கழகத்திற்கு எதிராக செயல்படுகிறது.  மத்திய அரசின் இந்த பழிவாங்கும் முரண்பாடான நடவடிக்கை கண்டனத்துக்குரியது. 

பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்க முடியாது. 12 வது திட்டத்தில் எங்கள் மாநில அரசு மிகப்பெரிய வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

கடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தின் போது இரட்டிப்பு வளர்ச்சி திட்டத்தை நான் வற்புறுத்தி இருந்தேன். ஆனால் வளர்ச்சியின் குறியீடு 9 சதவிகிதத்திலிருந்து 8.2 ஆக சதவிகிதமாக குறைந்திருப்பதை கண்டு நான் விரக்தி அடைந்தேன். ஆனாலும் என்னுடை தலைமையில் தமிழக அரசு இரட்டை இலக்க வெற்றியை அடைய திட்டமிட்டுள்ளது.12 வது திட்டத்தின் ஆரம்ப ஆண்டிலேயே என்னுடையஅரசு 7.4 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் நெருக்கடிக்கு இடையில் இது தேசிய சராசரியை விட அதிகமாகும். இந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023- ஐ வெளியிட்டேன் . அதற்காக 3 அடிப்படை திட்டங்களை நான் வெளியிட்டுள்ளேன். இதற்கு முதலீடு செய்வது மிகவும் சிரமமே. இப்போதைய திட்ட மதிப்பீடு மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு எப்படி நியாமற்று நடந்துகொள்கிறது என்பது தெரிகிறது. 

மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி 24.42 சதவிகிதத்திலிருந்து 23.08 சதவிகிமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியை குறித்த திட்டங்களில் மாநில அரசுகளே முதலீடு செய்துள்ளன. தமிழ்நாடு மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதியை மாநிலம் முழுவதும் உயர் தரத்தில் அளித்துள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் எப்படி கைவிப்பட்டுள்ளன என்பதை 12 வது திட்ட ஆவணம் எடுத்துக் காட்டுவது வெட்கப்பட கூடியது.

2011- ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குடும்பகட்டுப்பாடு திட்டம் எப்படி செயல்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் தனக்குரிய நிதியை தமிழகம் பெறவில்லை.

சர்வ ஷிக்ஷ அபியான், தேசிய ஊரக சுகாதார திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்கள், பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவு திட்டம், பாசன திட்டங்கள் ஆகியவற்றில் வழக்கமான மத்தியஅரசின் நிதி உதிவியை கூட தமிழகம் பெறவில்லை. சரக்குகள் மற்றும் சேவை வரியை அமல் படுத்துவதை இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசின் பிடிவாதமான நோக்கத்தை நான் கவனிக்க வேண்டும். மதிப்புக்கூட்டுவரியை அதிக வருவாய் பெறும் மாநிலங்களின் சட்ட ரீதியான கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. சி.எஸ்.டி. யை ஒழித்த மாநிலங்களின் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. வாட் வரி மற்றும் லெவி பிரச்சனைகளை மத்திய அரசு சரியான அணுகு முறையை கொள்ளவேண்டும் சிறு வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு  இத்தகைய பிரச்சனைகளை அமல்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்