அணுசக்தி மிகமிக அவசிம் - பிரதமர் மன்மோகன் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Manmohan-Singh

புதுடெல்லி, ஏப்.18 - ஜப்பான் நாட்டில் அணுசக்தி தொடர்பான நெருக்கடி ஏற்பட்டுள்ளபோதிலும்கூட இந்த உலகத்திற்கு அணுசக்தி என்பது தொடர்ந்து அவசியமான ஒன்றாகவே உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் சீனா, கஜகஸ்தான் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு டெல்லி திரும்பினார். டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவை சுட்டிக்காட்டினர். ஜப்பான் நாட்டில் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமி, அதையடுத்து அணுசக்தி நிலையங்கள் வெடித்தது, அதைத் தொடர்ந்து கதிர்வீச்சு கசிவால் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டது,  அணு உலைகள் பாதிக்கப்பட்டது போன்றவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிய நிருபர்கள் இவையெல்லாம் தெரிந்தும்கூட பல்வேறு நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்வது ஏன்? என்று பிரதமரை பார்த்து கேட்டனர். இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பானில் பேரழிவு ஏற்பட்டது உண்மைதான். அணுசக்தி நெருக்கடி ஏற்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனாலும் அணுசக்தி என்பது தொடர்ந்து அவசியமான ஒன்றாக இருக்கிறதே என்று கேள்வி கலந்த பதிலை நிருபர்களுக்கு அளித்தார். தற்போதைய நெருக்கடிக்கும், பிரச்சனைக்கும் இந்த உலகம் ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கும். அதுபற்றி ஆலோசித்து பிரச்சனைக்கு ஒரு முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். கஜகஸ்தான் நாட்டுடன் நேற்று முன்தினம் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: