முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு விருது

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.20 - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், 2011-12 ஆண்டின் சிறந்த காகித ஆலை என்ற உயரிய விருதினை பெற்றுள்ளது. இந்த விருது ஜனவரி 11, 2013 அன்று புதுடெல்லியில் இந்திய காகித உற்பத்தி கூட்டமைப்பு நடத்திய விழாவில் வழங்கப்பட்டது. 

கடந்த 5 முறைகளில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், சிறந்த காகித ஆலை விருதினை மூன்று முறைகள் பெற்று, இந்திய காகித நிறுவனங்களில் ஒரு முன்னோடியாக திகழ்க்கிறது. 

இந்த விருதை இந்திய காகித உற்பத்தி கூட்டமைப்பின் சார்பில் பலாபூர் தொழில் நிறுவனத்தின் தலைவர் கவுதம் தாபர், தமிழ்நாடு காகித செய்தித்தாள் காகித நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் அ.வெள்ளியங்கிரியிடம் வழங்கினார். 

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அச்சு மற்றும் எழுது காகித உற்பத்தித்திறன் ஆண்டொன்றுக்கு 4 லட்சம் டன் ஆகும். இந்நிறுவனம் கரும்பு சக்கையை முக்கிய மூலப்பொருளாக கொண்டு காகித உற்பத்தி செய்து வருகிறது. தனது காகித உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்தை உலகளவில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago