முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புதிய விமான நிலையம் 28-​ந்தேதி திறப்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன 20​ - சென்னை புதிய விமான நிலையம் 28-​ந்தேதி திறக்கப்படுகிறது.  விழாவில் துணை ஜனாதிபதி ஹமீதுஅன்சாரி கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். 

சென்னையில் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை நவீனமயமாக்கவும் உள்நாட்டு விமான முனையம்​2 கட்டவும் திட்ட மிடப்பட்டது. ரூ.1800 கோடி திட்ட மதிப்பில் கடந்த 2008 நவம்பர் மாதம் இதற்கான பணி தொடங்கியது.

2010-​ம் ஆண்டு பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதங்களால் திட்ட மதிப்பு ரூ.2300 கோடியாக உயர்ந்தது. இந்த புதிய விமான நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டே திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த நிலையில் புதிய விமான நிலையம், நவீன மயமாக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் வருகிற 28-​ந்தேதி திறக்கப்படுகிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஹமீதுஅன்சாரி கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago