முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடகக்காதல் திருமணங்கள் முலம் திருமாவளவன் வன்முறையை தூண்டுகின்றார்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

ஈரோடு, ஜன. 21 - ஈரோட்டில் நேற்று அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு பின் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது: இந்த பேரியக்கம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அல்ல.காதல் திருமணங்களுக்கும்,கலப்பு திருமணங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் பேச்சை அவரது கட்சி இளைஞர்கள் கேட்பது இல்லை. மாறாக பள்ளி,மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்கள் மனதை மாற்று வகையில் நவ நாகரிக உடைகள் அணிந்து கொண்டு அவர்களை மனதை கரைத்து பின் அவர்களை ஏமாற்றி நாடக காதல் திருமணம் செய்துகொள்கின்றனர் பின் பெண் வீட்டு மிரட்டி பணம் பறிக்கின்றார்கள். இதை திருமா வளவன் ஊக்குவிக்கின்றார். சில இடங்கள் என்.ஜி.ஓ கள் இதை பணம் கொடுத்து வளர்த்து வருவதாகவும் கேள்விபடுகின்றோம்.வன் கொடுமை சட்டத்தை மத்திய அரசு திருத்த வேண்டும்.பெண்கள் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக்க உயர்த்த வேண்டும்.திருமா வளவன் கடந்த 1997 .யில் திருமவளவன் தன் கட்சியினரிடம் பேசிகையில் உங்கள் ஒவ்வொரு வர்மீதும் 10 வழக்குகள் இருக்க வேண்டும் தில் ஒன்று கொலை வழக்காக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.இந்த பேச்சின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன் முறையை தூண்டும்பேச்சாகும். திருமாவளவன் தன் கட்சி யினருக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமைபெற வேண்டும், பின் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுரை கூற வேண்டும். இனி எந்த காலத்திலும் திருமா வளவனுடன் ஒட்டும்கிடையாது, உறவும் கிடையாது இவ்வாறு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியின் போது பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி,மாநில துணைபொதுசெயலாளர் மகேந்திரன், ஈரோடு மாவட்டசெயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony