ஆண்டிபட்டியில் நாடார்பள்ளி ஆண்டுவிழா கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி பிப் - 5 - ஆண்டிபட்டியில் உள்ள நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 32-வது ஆண்டு விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 32-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சாமுவேல்மோகன் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் வீரபத்திரன், ஓய்வுபெற்ற முதன்மை வனப்பாதுகாவலர் அர்ஜீனன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சி.சேட், மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் வேல்ஆண்டவர், மரியபுஷ்பம்சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளி நிர்வாக தலைவர் டாக்டர் முரளிதரன், செயலாளர் சந்திரன், இணைச்செயலாளர் மாதவன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பள்ளி மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக மழலைக்குழந்தைகளின் நடனம் காண்போர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பக்தி மற்றும் பாரம்பாரிய நடனங்களும், ஊமை நாடகமும், கரத்தே, யோக உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் தனிப்பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கநாணயமும், ரொக்கப்பரிசும் வழங்கி பாராட்டப்பட்டது. வருகைப்பதிவில் முதலிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்-ஆசிரியைகளும், ஊழியர்களும் செய்திருந்தனர். பள்ளி நிர்வாகி கோவர்த்தனன் நன்றி கூறினார்.     

 

இதை ஷேர் செய்திடுங்கள்: