ஷியா பிரிவினர் மீது தாக்குதல் - 50 பேர் கைது

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

லாகூர், பிப்.26 - ஷியா சிறுபான்மையினர் மீதான தாக்குதல்  தொடர்பாக, லஷ்கர் - இ - ஜாங்வி மற்றும் சிபா - இ - சஹபா பாகிஸ்தான்  ஆகிய  பயங்கரவாத  அமைப்புகளைச் சேர்ந்த  50 - க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் போலீஸார்  கைது செய்யதுள்ளனர். பாகிஸ்தானில் சமீப காலமாக ஷியா பிரிவினரை குறி வைத்து  அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தத் தாக்குதலில், அந்நாட்டின்  பஞ்சாப் மாகாணத்திலிருந்து செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ரஹீம்யார்கான் மாவட்டத்தில்  வசித்து வரும் லஷ்கர் - இ - ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் என்பவரை  போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  மேலும், ஜாங், டொபா டெக்சிங், ஃபைசாலாபாத் மற்றும்  லாகூர் உள்பட மாகாணத்தின்  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்களை  போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி கூறுகையில், ாசட்டம் ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின்  கீழ்  ஒரு மாத  காலத்துக்கு  அவர்களை கைது செய்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும்ா என்றார்.  போலீசாரின்  இந்த நடவடிக்கைக்கு லஷ்கர் - இ - ஜாங்வி மற்றும் சிபா - இ - ஜாங்வி  மற்றும் சிபா - இ - ஜாங்வி மற்றும் சிபா - இ - சஹபா பாகிஸ்தான் ஆகிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: