இசையமைப்பாளர் மணி சர்மாவுக்கு போலீசார் வலை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - நில மோசடி புகார் தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பண்ணன் 2010-ல் கிழக்கு கடற்கரை சாலையில் 75 சென்ட் நிலத்தை அவர் வாங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தனது இடத்தை பார்க்கச் சென்றபோது வேறு எவரோ வேலி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது, பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் உதவியாளர் ரகுராமன், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறியிருக்கிறார். 

கருப்பண்ணன் இது தொடர்பாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருவரின் பத்திரங்களையும் சாந்தோம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசோதித்தபோது கருப்பண்ணன் பத்திரம் தான் உண்மையானது என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மணி சர்மாவின் உதவியாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டார். மணி சர்மாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 


இதை ஷேர் செய்திடுங்கள்: