மோடி அரசால் குஜராத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.4 - முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசால் குஜராத் மாநிலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய தணிக்கைக்குழு கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. 

குஜராத் மாநிலம் தொடர்பாக 2009-2010 மற்றும் 2010-2011-ம் ஆண்டுக்கான அறிக்கையை மத்திய தணிக்கைக்குழு தயாரித்துள்ளது. இந்த அறிக்கை நேற்று குஜராத் மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தில்  நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ. அரசால் மாநிலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக்காரணம் ஊழல் மற்றும் முறைகேடுகள்தான் என்று தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்த மோடி அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் சி.ஏ.ஜி. கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. குஜராத் மாநிலத்தில் குஜராத் மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முதல்வர் கையாண்டு வரும் விதத்திற்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பாராட்டப்படுகிறது. அதேசமயத்தில் குஜராத்தில் முதலீடுகளை பெருக்குவதற்கு பெரும் கம்பெனிகளின் வற்புறுத்தலுக்கு மோடி சம்மதித்திருப்பதற்கு பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் சி.ஏ.ஜி கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: