பாஸ்டன் குண்டு வெடிப்பு: குக்கரின் பாகங்கள் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பாஸ்டன், ஏப். 18 - பாஸ்டனில் வெடிகுண்டை பேக் பண்ண பயன்படுத்தப்படும் குக்கர்களின் பாகங்கள் கிடைத்துள்ளதாகவும், இதை வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பாஸ்டன் எப்.பி.ஐ. அலுவலக தலைவர் ரிக் டீ லாரியர்ஸ் தெரிவித்துள்ளார். 

பாஸ்டனில் நடந்த மாரத்தான் போட்டி முடியும் இடத்தில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 180 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எப்.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாஸ்டன் எப்.பி.ஐ. அலுவலக தலைவர் ரிக் டீ லாரியர்ஸ் கூறுகையில், 

பாஸ்டனில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் குண்டுகளை பேக் பண்ண பயன்படும் குக்கர் பாகங்கள் கிடந்தன. அவற்றை நிபுணர்கள் ஒன்று சேர்த்துள்ளனர். இது போன்ற குண்டுகள் ்ராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்படுகின்றன. வெடிகுண்டுகளை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட கருப்பு நைலான் பைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன என்றார். 

இந்த குண்டுகளில் சிறு சிறு மெட்டல் துண்டுகள், கூரிய நுனி உள்ள ஆணி போன்ற பொருட்கள் அதிக அளவில் இருந்துள்ளன. குண்டுகள் வெடித்ததில் இவை மக்களின் உடல்களில் பாய்ந்தன என்று டாக்டர் ஜார்ஜ் வெல்மஹாஸ் தெரிவித்தார். மாரத்தான் பந்தயத்தில் கலந்து கொண்ட தனது தந்தையை பார்க்க எல்லை கோடு அருகே நின்ற 8 வயது சிறுவன் மார்ட்டின் ரிச்சர்ட் குண்டுவெடிப்பில் பலியானான். அவனது தாய்க்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சகோதரி ஒரு காலை இழந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: