முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சஞ்சய் தத் மறு ஆய்வு மனு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஏப். 23 - நடிகர் சஞ்சய் தத் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். மும்பை நகரில் கடந்த 1993 ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வாங்கியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், விசாரமை காலத்தில் சுமார் 18 மாதங்கள் சிறையில் இருந்தார். இவ்வழக்கை விசாரித்த தடா கோர்ட் ஆயுத சட்டப்படி சஞ்சய் தத் குற்றவாளி என்று 2007 ல் தீர்ப்பளித்தது. அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

எனினும் அவர் தடா சட்டத்தின் கீழான பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். மும்பை குண்டு வெடிப்பு மற்றும் அதை தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தின் போது தற்காப்புக்காக துப்பாக்கி வாங்கியதாக அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை தடா நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தனக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் 21 ம் தேதி தள்ளுபடி செய்தது. 

எனினும் அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. சிறைவாசம் அனுபவிப்பதற்காக அவர் சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சரணடைவதற்கு அவகாசம் தேவை என்று சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்று அவருக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையும், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும் எதிர்த்து சஞ்சய் தத் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்