முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் மீதான கைது நடவடிக்கைக்கு ராணுவ அதிகாரிகள் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப். - 29 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீதான கைது நடவடிக்கைக்கு 75 ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஷாரபை அவமதிக்கும்படி யான நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2007-ல் ஆட்சியிலிருந்தபோது அவசரநிலையை அமல்படுத்தி நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது,  முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழ்க்கில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது ஆகியவை தொடர்பான வழக்குகளில் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டுள்ளார்.  அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமாக அவசரநிலையை அமல்படுத்திய முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சிலர் மனு செய்துள்ளனர். இந்நிலையில் குவெட்டாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிறசி கல்லூரியைச் சேர்ந்த 75 ராணுவ அதிகாரிகள் நாடுளுமன்ற மேலவையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை   சந்தித்து பேசினர். ராணுவ தரப்புக்கு கர்னல் சாகிப் அலி சீமாவும், மேலவையின் பாதுகாப்புக்குழுவுக்கு முஷாகித் ஹுசேன்சையதும் தலைமை வகித்தனர்.  ராணுவ அதிகாரிகள் கூறுகையில் அரசியல் சாசன சட்டத்தின்படி ராணுவத்துத்தை விமர்சிக்கூடாது. ராணுவத்தை இழிவு படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்றனர். முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி மிர்ஸா அஸ்லம் பெக் உள்ளிட்ட ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் பலரும் முஷாரப்புக்கு எதிரான நடைவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்