டெல்லி போலீஸ் அதிகாரி உ.பி.யில் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.18 - வழிப்பறி வழக்கை விசாரிப்பதற்காக உத்தரபிரதேச மாநிலம் சென்ற டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 உதவி சப்இன்ஸ்பெக்டர் ஜெய் பகவான் சர்மா தலைமையில் ஒரு குழுவினர் பகில்புரா காவல் நிலையப் பகுதியில் உள்ள பில்ஹரி கிராமத்துக்கு சென்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சர்மா உயிரிழந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.டெல்லி புறநகர் பகுதியில் நடைபெற்ற ரூ.8 லட்சம் கொள்ளை தொடர்பாக சர்மா விசாரிக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: