மாளிகையை விற்க லட்சுமி மிட்டல் முடிவு

திங்கட்கிழமை, 27 மே 2013      இந்தியா
Image Unavailable

லண்டன், மே. 28 - பொருளாதார நெருக்கடி ஸ்டீல் தொழில் துறையில் கோலோச்சும் உலகின் பணக்கார இந்தியரான லட்சுமி மிட்டலையும் விட்டு வைக்கவில்லை. . அவர் தமது லண்டன் ஆடம்பர மாளிகையை விற்பனை செய்ய முடிவு  செய்திருக்கிறாராம். உலக உருக்கு மன்னன் என்று பெயரெடுத்தவர் லட்சுமி மிட்டல். அவர் தமது மகன் ஆதித்யாவுக்காக லண்டனில் ஆடம்பர மாளிகை ஒன்றை 2008 ம் ஆண்டு வாங்கியிருந்தார். 2008 ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த ஆடம்பர மாளிகையின் விலை 117 மில்லியன் பவுண்டுகள். இந்த ஆடம்பர மாளிகையைத்தான் லட்சுமி மிட்டல் விற்பனை செய்யப் போகிறாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: