முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவர் பெயரை களங்கப்படுத்துவதா? நடிகர் விக்ரம் வீடு முற்றுகை 50 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      சினிமா

சென்னை, மே.- 1 - நடிகர் விக்ரம் நடித்து வெளிவரும் படம் ஒன்றில் மனவளர்ச்சி குன்றியவராக நடிக்கிறார். அந்த படத்திற்கு செய்வதிருமகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது தேவர் பெயரை களங்கப்படுத்துவதாக உள்ளதாக நேற்று ஒரு அமைப்பினர் நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி விபரம் வருமாறு:- நடிகர் விக்ரம் தெய்வத் திருமகன் என்ற படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் இயக்கியுள்ளார். மோகன் நடராஜன் தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் தலைப்பு தெய்வத்திருமகன் என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேவர் பேரவை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வத்திருமகன் என்று அழைத்து வருகிறோம். அந்தப் பெயர் அவருக்குத்தான் பொருந்தும், சினிமா படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்திற்கு அந்தப் பெயரை சூட்டி இருப்பது அவரை அவமதிப்பதாகும்.
எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு அமைப்பினை சேர்ந்த சுமார் 50 பேர் தெய்வத் திருமகன் படத்தின் தலைப்பை எதிர்த்து சென்னையில் இன்று நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். விக்ரம் வீடு திருவான்மியூர் அருண்டேல் கடற்கரை சாலையில் உள்ளது. இன்று காலை தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் முத்தையா தலைமையில் 50​க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக விக்ரம் வீட்டுக்கு சென்று முற்றுகையிட்டனர்.
படத்தின் தலைப்பை மாற்றக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் கிடைத்ததும் அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். முத்தையா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக விக்ரம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்ப்பு காரணமாக படத்தின் தலைப்பை தெய்வத்திரு மகள் என்று மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago