முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மேற்படிப்பை தொடர மத்திய அரசு புதிய விதிமுறை

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 22 - கிராமங்களில் ஒரு வருடம் பணியாற்றினால் மட்டுமே மருத்துவ மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடர முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் வெளியிட்டார். இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

வரும் 2014 -15 ம் கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர வேண்டுமானால் அவர்கள் கிராமங்களில் ஒரு வருடம் பணியாற்ற வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளுடன் நீண்ட காலமாக ஆலோசித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கிராமப்புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. 

கிராமப்புறங்களில் சேவையாற்ற மருத்துவ மாணவர்கள் விருப்பம் காட்டாததால் அங்குள்ளவர்கள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளை நாடி வருகிறார்கள். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியம். கிராமத்தில் ஒரு வருடம் பணியாற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். மேற்படிப்புக்கான நுழைவு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும். இது குறித்து அனைத்து மருத்துவ பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் முறையான அறிவிக்கையை அனுப்பும் பணியில் இந்திய மருத்துவ கவுன்சில் ஈடுபட்டு வருகிறது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்