முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 42 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

போட்டிஸ்கம், ஜூலை. 8 - நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளிக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் இருந்து பிரிந்த குழுக்களும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இவை கடந்த 2010 ம் ஆண்டு முதல் நிகழ்த்திய வன்முறை செயல்களுக்கு இதுவரை 1,600 பேர் உயிரிழந்து விட்டனர். ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் மேற்கத்திய கல்வி முறையை இந்த பயங்கரவாதிகள் எதிர்க்கின்றனர். 

இந்நிலையில் நைஜீரியாவின் போட்டிஸ்கம் நகரை அடுத்த மாமுடொ கிராமத்தில் உள்ள அரசு உறைவிட பள்ளிக்கு பொகோ ஹராம் பயங்கரவாதிகள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சில மாணவர்களை வளாகத்திற்கு வெளியே தூக்கி சென்ற பயங்கரவாதிகள் அவர்களை உயிரோடு எரித்து கொன்றனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு 41 மாணவர்களும் முகமது மூசா என்ற ஆசிரியரும் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்