முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத செயல்: மத்திய அரசின் பலவீனமே காரணம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

லால்கர், ஜூலை. 10 - மத்திய அரசு பலவீனமாக இருப்பதால்தான் பயங்கரவாத மற்றும் மாவோயிஸ்டு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு லால்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது, 

ரம்ஜான் மாதம் மற்றும் பருவமழை காலமாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில அரசு விரும்பியது. ஆனால் இப்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிய உள்ள காரணத்தால் மாநில தேர்தல் ஆணையத்தின் திட்டப்படி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். 

பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவில் பகுதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மாவோயிஸ்டு தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளந. பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். இவற்றை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காததே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம். இது மத்திய அரசின் பலவீனத்தை உணர்த்துவதாக உள்ளது. 

ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய பக்கத்து மாநிலங்கள் வழியாக மாவோயிஸ்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் ஜங்கல் மகாலுக்குள் ஊடுருவி ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளனர். ஆனால் எத்தகைய வன்முறை சம்பவங்களையும் மாநில அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago