ஒரு வால்மார்ட் போனால் பல மார்ட்டுகள் வருமாம்!

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 25 - ஒரு வால்மார்ட் போனால் இன்னொரு மார்ட் வரும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வால்மார்ட் இந்தியாவில் உள்ள சிறு தொழில் செய்வோரிடம் இருந்து 30 சதவீத பொருட்களை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. 

ஆனால் வால்மார்ட்டோ 20 சதவீத பொருட்களை மட்டுமே வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு ஒன்றும் ஒரு வியாபார நிறுவனத்திற்காக கொள்கையை உருவாக்கவில்லை. இது ஒரு தேசிய கொள்கை. வால்மார்ட் போனால், பல மார்ட்டுகள் உள்ளன. அவை வந்து சேரும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: