தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ரகளையால் பார்லி., ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
Parliament-House-Delhi1

 

புதுடெல்லி. பிப். 24 - தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.கள்  அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைகக வேண்டும் என்பது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.க்களின் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கை இது நாள்வரை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் தெலுங்கானா பகுதி மக்கள் கடந்த இரு நாட்களாக பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பாராஏளுமன்றத்தின் லோக் சபையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியனர் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் எழுந்து தெலுங்கானா பிரச்சினை குறித்து விவாதிக்க சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் மற்ற எம்.பி.க்களும் கோஷம் எழுப்பினர். விஜய சாந்தி உள்ளிட்ட அந்த எம்.பி.க்கள் ஜெய் தொலுங்கானா என்று கோஷம் எழுப்பியவாறு அமளியில் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த பிரச்சினை தொடர்பாக விவாதிக்க சபையை ஒத்திவைக்க முடியாது என்றும் கேள்வி நேரம் மு முடிந்ததும் இது குறித்து விவாதிக்கலாம் என்றும் சபாநாயகர் கூறினார். 

ஆனால் சபாநாயகரின் இந்த பேச்சை  அவர்கள் கேட்கவில்லை. இதனால் அமளி அதிகரித்தது. இதை அடுத்து  30 நிஇமிடங்களுக்கு  சபையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.

பிறகு மீண்டும் சபை கூடிய போதும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியை விட்டு விலக மறுத்து கோஷங்களை எழுப்பினர். 

இதனால் சபை மீண்டும் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சபை கூடிய போதும் இதே நிலை நீடித்தது. அப்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமித கட்சி எம்.பி.க்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவரும் மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் பேசினார்.

உறுப்பினர்களை அமைதிப்படுத்த மீரா குமார் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காததால் சபை 3 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. 

இதே போல பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையிலும் இதே பிரச்சினையை வமுன்வைத்து தெலுங்கானா பகுதி எம்.பி.க்கள் பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டதால் அங்கும் சிறிது நேரம் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டதது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: