முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை - சென்னை ஐகோர்டு மறுப்பு

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே .19 - சட்டசபை இட மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரித்துள்ளது.இது குறித்த விபரம் வருமாறு:- சென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில் செயல்படும் தமிழக சட்டசபை மற்றும் தலைமை செயலக அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த நூலகம் காலி செய்யப்பட்டது. 

இந்த இடமாற்றத்தின் மூலம் பொது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த இட மாற்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டார். இம்மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15​ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டனர். 

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி nullநீதிபதிகளிடம், சட்டசபை இட மாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்