முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: ஆவணங்களை வழங்கியது இத்தாலி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.4 - ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரம்  தொடர்பான முக்கிய ஆவணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இத்தாலி வழங்கியுள்ளது.

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து, அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ரூ.3,600 கோடிமதிப்பில் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்த விவகா ரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அதுபற்றி சி.பி.ஐ . வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த விசாரணைக்கு உதவும் நோக்கத்தில் முக்கிய ஆவணங்ளை பாதுகாப்பு அமைச்சகத்திடம் இத்தாலி வழங்கியுள்ளது.  மிலன் கோர்ட்டில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விசாரணக்கு தங்கள் நாட்டிடம் உள்ள முக்கிய ஆவணங்களை வழங்க இத் தா லி நாட்டு சட்டத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன் அடிப்படை யில் அந்த ஆவணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளிடம் இத்தாலி நாட்டு சட்டத் துறை அதிகாரிகல் வழங்கினர்.                      

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்