Idhayam Matrimony

காங்., ஆட்சி ஊழல்கள் பற்றி விசாரணை: ஆம் ஆத்மி அதிரடி

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.25 - டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. அப்போது கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆட்சி பற்றி ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாகப் பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பதால் ஊழல் பிரச்சனை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மீது பெரிய ஊழல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தயாரித்து வைத்துள்ளது. ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் மந்திரிகள் பெரிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில்  பெரியஅளவில் ஊழல் நடந்துள்ளதாக அந்த ஊழல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட  திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளதை ஆம் ஆத்மி கட்சியினர் கண்டுபிடித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் போன்ற துறைகளில் போலியான பில்கள் தயாரித்து முறைகேடு நடத்தியதையும் இவர்கள்  கண்டுபிடித்துள்ளனர். ரிதலா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ரூ.300 கோடிக்கு மின்சாரம் வாங்கியதாக ஒரு ஆவணம் உள்ளது. ஆனால் ரிதலா நிறுவனம் கடந்த 2010_ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமை யைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர்  ஊழல் புரிந்துள்ளனர். இந்த ஊழல்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து உவி.ய விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இது டெல்லி தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.                                   

         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago