புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அர்பணித்தார் பிரதமர்

PM Oil

 

பினா(ம.பி)-மே,21 - மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பினா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திறந்துவைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார். இந்தியாவும் ஓமன் நாடும் சேர்ந்து இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பினா நகரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கம்பெனியை ஓமன் நாட்டு சுத்திகரிப்பு பிரைவேட் லிமிட்டெட்டும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்டும் சேர்ந்தும் புதியதாக கட்டியுள்ளது. இதில் மத்தியப்பிரதேச மாநில அரசுக்கு ஒரு சதவீத பங்கு உண்டு. 

இந்தி புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்த புதிய ஆலையில் வருடத்திற்கு 6 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க முடியும். நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் வரும் 2012-ம் ஆண்டிற்குள் 27 சதவீதம் அதிகரித்து 2 ஆயிரத்து 380 டன்னாக உயரும் என்றார். கடந்த 1998-ம் ஆண்டில் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 620 டன்னாக இருந்தது. இது தற்போது ஆயிரத்து 870 ஆக உள்ளது. வரும் 2012-ம் ஆண்டில் இது மேலும் 2 ஆயிரத்து 380 டன்னாக அதிகரிக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ