முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வி - டெண்டுல்கர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை,மே. 22 - இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் ரா ஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கிறோம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கே ப்டனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை வாங்க்டே மை தானத்தில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. 

இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்னே எடுக்க முடிந்தது. ரோகித் சர்மா 47 பந்தில் 58 ரன்னும்(5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் டெண்டுல்கர் 31 ரன்னும் எடுத்தனர். வாட்சன் 3 விக்கெட் கைப்பற்றினார். 

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன் எடுத்தது. வாட்சன் 47 பந்தில் 89 ரன்னும், (9 பவு ண்டரி, 6 சிக்சர்) டிராவிட் 32 பந்தில் 43 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்த னர். வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். 

ராஜஸ்தான் அணிக்கு அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்து விட்டன. அந்த அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு (பிளே ஆப்) தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. 

ராஜஸ்தான் அணி 14 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, பெற்றது. 7 போட்டியில் தோல்வி அடைந்தது. ஒரு ஆட்டம் மழையால் கைவிட ப்பட்டது. அந்த அணி 13 புள்ளிகள் பெற்று 6 -வது இடத்தைப் பிடித் தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி 5 -வது தோல்வியை சந்தித்தது. கடந்த 3 ஆட்டத்தில் அந்த அணி தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், மும்பை தனது கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தாவை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.        

18 புள்ளிகள் பெற்றுள்ள அந்த அணி தற்போது ரன்ரேட்டில் பின்தங்கி உள்ளது. இந்தத் தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டெ ண்டுல்கர் கூறியதாவது - தோல்விக்கு எந்த காரணமும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. 

நாங்கள் அதிகமான ரன்னைக் குவிக்க தவறிவிட்டோம். வாட்சனின் ஆட்டம் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எந்த கட்டத்திலும் ஏற்படவில்லை. 

கடந்த சில போட்டிகளில் எங்களது ஆட்டம் சிறப்பாக அமையவில் லை. 18 புள்ளிகளைப் பெற இன்னும் 1 புள்ளி தேவைப்படுகிறது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்வா? சாவா? நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டத்தில் கலந்து கொண்டு 8 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று உள்ளது. மும்பை அணி, கடைசி லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று சந்தி க்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்