இஸ்ரோஒப்பந்தம் - பிரதமர் விளக்கமளிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்

bjpflag 1

 

புதுடெல்லி, பிப்.24 - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும்(இஸ்ரோ) தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து பிரதமர் பாராளுமன்றத்தில்  விளக்கமளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.  இந்த துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எஸ்.பாண்ட் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது என்று பா.ஜ.க. குறிப்பிட்டுள்ளது. 

2 ஜி அலைக்கற்றை ஊழலைவிட இது மிகப்பெரியது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் எழுப்பப்போவதாக அக்கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தை அடுத்த வாரம் எழுப்புவது என முடிவுசெய்யப்பட்டதா நிருபர்களிடம் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து ஜே.பி.சி. அமைக்கும் விதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக முன்டே கூறினார். இதுதவிர காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவ ரேஷன் பொருள் விநியோக முறைகேடு, வெளிநாட்டு கறுப்புப்பண விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும் சீன ஊடுருவல், சி.பி.ஐ. செயல்பாடு உள்ளிட்ட விஷயங்களையும் பாராளுமன்றத்தில் எழுப்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது, சுட்டுத்தள்ளப்படுவது உள்ளிட்ட விஷயங்களை  பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் ஏற்பட்ட விபத்து, தெலுங்கானா யாத்திரை ஆகியவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவது எனவும் இது தொடர்பாக சுருக்கமாக விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்டே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ