முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை இல்லை - கேப்டன் தோனி பேட்டி

வியாழக்கிழமை, 26 மே 2011      விளையாட்டு
Image Unavailable

மும்பை, மே. - 26  - இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று சென்னை அணிக் கேப்டன் தோனி கூறினார். ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் போட்டியில் பிளே ஆப் என்று அழைக்கப் படும் அடுத்த சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் துவங்கியது. மும்பை வாங்க்டே மைதானத்தில் இந்த ஆட்டம் நடந்தது. இந்த முதல் பிளே ஆப்பில் தோனி தலைமையிலான சென்னை சூப்ப ர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சையில் இறங்கின.  
இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ப தால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதலில் விளையாடிய பெங் களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து இருந்தது. விராட் கோக்லி 44 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அகர்வால் 34 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில், 4 விக்கெ ட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ரெய்னா, மார்கெல், கேப் டன் தோனி ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் இந்த வெற்றி கிடைத் தது.
ரெய்னா 50 பந்தில் 73 ரன்னும் (4 பவுண்டரி, 6 சிக்சர்),தோனி 19 பந்தி ல் 29 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அல்பி மார்கெல் 10 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தனர்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து சென் னை சூப்பர் கிங்ஸ் அணிக் கேப்டன் தோனி நிருபர்களிடம் கூறியதா வது - 176 ரன் என்ற இலக்கு மிகவும் கடினமானதே.
ஆனால் இக்கட்டான இந்த நிலையில் விக்கெட்டுகள் விழாமல் இருந் தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அதற்கு ஏற்றவா று விளையாடினோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந் தது.
ஆனால் வெற்றி இலக்கை எட்டுவோம் என்ற 100 சதவீத நம்பிக்கை இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடும் என்பது தெரியும். எந்த ரன் இலக்கையும் எடுக்கக் கூடிய திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக் கேப்டன் டே னியல் வெட்டோரி கூறியதாவது -20 ஓவர் போட்டியில் இது ஒரு சிற ந்த ஆட்டம். சுரேஷ் ரெய்னா மிகவும் அதிரடியாக ஆடி எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துச் சென்று விட்டார்.
தொடக்கத்தில் எங்களது பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. கடைசி நேரத்தில் மோசமாக அமைந்து விட்டது. தோனி, ரெய்னா, மார்கெல் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை எளிதில் அவுட் செய்வது கடினம் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி தோற்றாலும் வெளியேறாது. அந்த அணிக்கு இறுதி ப் போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பு உள்ளது. மும்பை - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த ஆட்டம் வருகிற 27 -ம்  தேதி சென்னையில் நடக் கிறது. இறுதிப் போட்டி சென்னையில் 28 -ம் தேதி நடக்கிறது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்