முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்குகளால் செய்யப்பட்ட 1,200 பொருட்களை அழிக்க முடிவு

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், பிப்.18 - இங்கிலாந்து அரணமனையில் உள்ள யானை தந்தத்தால் அலங்காரம் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார். 

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் அரணமனையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலத்தில் ஏராளமான வன விலங்குகளின் தோல், தந்தம், கொம்பு உள்ளிட்ட பொருட்களபம், அவற்றாளே செய்யப்பட்ட பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொணடு வரப்பட்ட யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலையுயர்ந்த சிம்மாசனம் உள்படபல்வேறு தந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களும் உள்ளன. தற்போது இவற்றை அழிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து அரண்மனையில் வன உயிரின காப்பகத்தின் பொறுப்பாளர் ஜானே குட் ஆல் கூறுகையில் , பக்கிங்காம் அரண்மனையில் உள்ள தந்த வேலப்பாடுள்ள பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தந்த சிம்மாசனம், விசிறி, கலைப் பொருட்கள் உள்ளிட்ட 1,200 பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். சட்டவிரோதமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இலவரசர் வில்லியம் பெசினார். மேலும், விலிங்குகளின் தோல்கள், கொம்புகள், தந்தங்கள் உள்ளிட்டவற்றால் செய்யப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதந்படி தனது இப்பொருட்களை அழிக்க அவர் உத்தரவ்விட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆந்டு மட்டும் இங்கிலாந்தில் 45 டன் தந்தங்கள் கைபற்றப்பட்டுள்ளது. அவற்றில் சீனாவில் இருந்து கடந்த ஆண்டு ஆறு மாதங்களில் கடத்தப்பட்ட 7 டன் தந்தங்கள் கைபற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

ஐநாவுடன் இணைந்து இரிய வன விலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட இளவரசர் வில்லியம் ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் மட்டபம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 515 கோடி மதிப்புள்ள கடத்தி கொல்லப்பட்ட வனவிலங்குகளின் உறுப்புகள் கைபற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago