முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மீது விசாரணை: ஐ.நா. கவுன்சிலில் தீர்மானம் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெனீவா, மார்ச். 5 - இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. 

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி கட்டபோரின் போது, இலங்கை ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 

இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து உள்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன. 

இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. 

நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வரைவு தீர்மானத்தை இங்கிலாந்து, மான்டினெக்ரோ, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் முன் மொழிந்துள்ளன. 

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயலாளர் நவஞிதம்பிள்ளை கடந்த ஆண்டு ஆகஸ்டில் இலங்கையில் ஆய்வு மேற்கொண்டார். 

அவர் அளித்த அறிக்கையில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றும், இது குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார். 

மேலும், பல்வேறு பரிந்துரைகளை அவர் அளித்துள்ளார். நவஞிதம் பிள்ளையின் இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பகுதியில் செய்ய வேண்டிய மறுநிர்மாண பணிகள், உள்கட்டுமானப் பணிகள், அவர்களை மறு குடியமர்த்த வேண்டிய பணிகள் ஆகியவற்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். 

இந்த விஷயத்தில் இலங்கையின் செயல்பாட்டில் ஏராளமான இடைவெளி கள் காணப்படுகின்றன. 

மேலும், இலங்கை அரசின் விசாரணை அறிக்கையை முறைப்படி ஐ.நா. வில் தாக்கல் செய்யப்படவில்லை. 

எனவே, சர்வதேச விசாரணை நடத்துவதற்கு இது போதுமான ஆதாரமாகும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

_________________________________________________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago