முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து வேறுபாடுகளை மறக்க விரும்புகிறோம்: அமெரிக்கா

புதன்கிழமை, 5 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.6 - நியூயார்க்கில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அண்மையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுவாடுகளை மறக்க விரும்புகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்திள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சராக நிஷா தேசாய் விஸ்வால் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிஸ்வால் பெங்களூருக்கு வந்தார். பிறகு டெல்லி செல்லும் அவர், மூத்த அரசு அரிகாரிகளைச் சந்தித்து விட்டு அமெரிக்கா திரும்புகிறார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தியாளர்களிடம் குறியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வளியுருத்தும் படி, நிஷா தேசாய் பஸ்வானிடம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். நாங்கள் பழைய சம்பவங்களை மறக்க விரும்புகிறோம். இரு நாடுகளும் இணைந்து செயல்பட  வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதை வலியுறுத்தவே, நிஷா தேசாய் பிஸிவால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

பெங்களூரில் அரசு மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து கூட்டு முயர்ச்சிகளை ஊக்குவுக்கும் அவர், உயர் தொழில்நுட்பங்களை அதிகப்படுத்துவதும் மற்றும் பொறியியல் துறைகளின் நிலைப்பாடு, இந்திய-அமெரிக்க இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கிறார். டெல்லியில் மூத்த அரசு அதிகாரிகளைச் சந்தித்து பிராந்தியப் பிரச்சனைகள், ராணுவ பாதுகாப்பு பகிர்வு மற்றும் பொரிளாகார நிலைபாடு குறித்து அவர் ஆலோசனை நடத்துகுறார்.

நிஷா தேசாய் பஸ்வாலின் இப்பயணம் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாங்கள் இந்தியாவுடன் மிகவும் பரந்த நல்லுரவைக் கொண்டுள்ளோம்.மேலும், ஏழ்மையை ஒழிப்பது முதல், விண்வெளி ஆய்வு, பயஙகரவாத எத்ர்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் இந்தியாவின் வெருமையான நண்பராகவே நாங்கள் விளங்கி வருகிறோம் என்றார் ஜென் சாதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்