முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபரின் மனைவி லியான் யுனெஸ்கோ தூதரானார்

சனிக்கிழமை, 29 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், மார்ச் 30 - பெண்களின் கல்வியை ஊக்குவிக்க, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மனைவி பெங்கலியான் யுனெஸ்கோவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் யுனெஸ்கோ சார்பபில் விழா நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மனைவி பெங்லியானை,. பெண்களுக்கு அடிப்படைக் கல்வியை ஊக்குவிக்கும் சிறப்பு தூதராக நியமித்ததாக யுனெஸ்கோ அறிவித்தது. சீனாவில் புறநகர் பகுதி ஒன்றில் இரவு நேற பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த என் தந்தையை இப்போது நினைத்து பார்க்கிறேன். அன்று அவருடனும் என் தாயுடனும் அமர்ந்து எழுத பழகிய வார்த்தைகளை, இன்று நான் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறேன். பல்வேறு நாடுகளில் அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு அடிப்படை கல்வியை அளிப்பது சாத்தியமான ஒன்றுதான். எனவே, இப்பதவியை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். என்று பெங் லியான் கூறினார்.

பெண்களுக்கு தரமான கல்வி அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருப்பை பெங் லியானிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அவர் ஏற்கெனவே கல்வி வேறுபாடுகளை கலைய வேண்டும் என்று போராடி வருகிறார்.அவரிடம் பெண்களின் கல்வி குறித்து பொறுப்புகளை ஒப்படைத்தால், அவற்றை சிறப்பாக செய்து முடிப்பார். அவரது பெண்களின் கல்வி குறித்து எண்ணங்களும் அர்ப்பணிப்பு உணர்வுகளும் இந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் என்று யுனேஸ்கோ கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தில் காசநோய் மற்றும் எசே.ஐ.வி.,நோய் தடுப்பு பிரிவின் நல்லெண்ண தூதராக தற்போது சீன அதிபரின் மனைவி பெங் லியான் பணியாற்றி வருகிறார் என்பது கிறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago