முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரிகள் பாபா ராம்தேவுடன் சமாதான முயற்சி

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.4 - சாகும்வரை உண்ணாவிரதத்தை இன்று மேற்கொள்ளவிருக்கும் பாபா ராம்தேவை எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என்று நோக்கத்தில் மத்திய மூத்த மந்திரிகள்,வெளியூர் பயணத்தை ரத்துசெய்துவிட்டு டெல்லியிலேயே தங்கியுள்ளனர். 

நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. இதை ஒழிக்கவும் பதுக்கிவைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான கோடி ரூபாயை வெளிக்கொண்டுவரக்கோரியும் பாபா ராம்தேவ் நாளை முதல் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இதனால் மத்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சமூக நலத் தொண்டர் ஹசரேவும் கலந்துகொள்ளவிருக்கிறார். இது மத்திய அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ராம்தேவை சமாதானப்படுத்தி எப்படியும் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ராம்தேவை எப்படியும் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி அவர், தன்னுடைய கொல்கத்தா பயணத்தை ரத்துசெய்துவிட்டு டெல்லியிலேயே இருக்கிறார். மேலும் மங்களூர் செல்லவிருந்த மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லியும் தன்னுடைய பயணத்தை ரத்துசெய்துவிட்டு டெல்லியிலேயே இருக்கிறார். இவர்கள் இருவரும் மீண்டும் ராம்தேவை சந்தித்து சமாதானப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. ஆனால் ராம்தேவ் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டாலும் குறைந்தது 3 நாட்களாவது உண்ணாவிரதம் இருக்க ராம்தேவ் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago