முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் மின் உற்பத்தி 900 மெகாவாட்டாக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 மே 2014      தமிழகம்
Image Unavailable

 

திருநெல்வேலி, மே 7 - கூடங்குளம் அனுமின் நிலையத்தில் மின் உற்பத்தி 900 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அனு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது உலையில் 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் அதிகபட்சமாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து மத்தியத் தொகுப்பில் இணைக்கப்பட்டதப. பின்னர் ஆய்வுக்காக மின் உற்பத்திபல முறை நிறுத்தப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வந்தது.

கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 600 மெகாவாட் உற்பத்தி அளவை கூடங்குளம் அணுமின் நிலையம் எட்டியது. அதன்பின்பு பல்வேறு கட்ட சோதனைக்குப் பின்பு, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 900 மெகாவாட் அளவுக்கு உற்பத்தி அனுமதி கோரப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதற்கான அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, உற்பத்தி அளவு 900 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆய்வு செய்து மின் உற்பத்தி முன்னேற்றத்தின் விளைவுகள் குறித்து அறிக்கை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. விரைவிலேயே முழு உற்பத்தி அளவான 1000 மெகாவாட்டை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony