முக்கிய செய்திகள்

12-ம் - 10-ம் வகுப்பு 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை-ஜெயலலிதா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 7 - 12-ம், 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவர்களுக்கு பரிசு தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் 2010-2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று  இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மாணவர்கள் கல்வி கற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்ல குடிமகன்களாக உயர  பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடத்தை பிடித்த ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த ஒரு மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த நான்கு மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், 80 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் 6 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடத்தை பிடித்த ஐந்து மாணவர்களுக்கு தலை 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த10 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த 24 மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம், 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 39 மாணவர்களுக்கு, 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
அதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் முதல் இடத்தை பிடித்த மூன்று மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த 10 மாணர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த 20 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வீதம், 3 லட்சம் ரூபாயு ஆக மொத்தம் 33 மாணவர்களுக்கு 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த கல்வியாண்டில் (2010-2011) நடைபெற்ற அருச பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல்  மூன்று இடங்களை பிடித்த மொத்த 78 மாணவர்களுக்கு 14 லட்சத்த 20 ஆயரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, மாணவர்கள் மேலும் கல்வியியல் சிறந்து விளங்கி, அதன் வழி நின்று அறிவுடன் கூடிய நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகிய பண்புகளுடன் வாழ்வில் மேலும் உயர வாழ்த்தினார்கள்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஊட்டி சாதனை படைக்க வைத்த ஆசிரியர்களுக்கும், பொற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து ரொக்க பரிசையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்று கொண்ட மாணவர்களும், அவர்கள்தம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ரொக்க பரிசுகளையும், சான்றிதழ்களையும் அளித்து பாராட்டி ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களகு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: