முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம்- ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன் - 12 - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று குழந்தைத் தொழிலாளர்முறை எதிர்ப்பு தினச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர்முறை எதிர்ப்பு தினச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது:- குழந்தைப் பருவம், குதூகலமாய் வண்ணத்துப்பூச்சிகளாய் விளையாடி துள்ளித் திரியும் காலம். பள்ளி சென்று பயிலவேண்டிய காலம். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நமது கடமையாகும்.
நமது நாட்டில் அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். குழந்தைகளை உடல் உழைப்பின் நிர்பந்தத்தில் இருந்து விடுவித்து அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை உறுதிசெய்வது நமது தலையாய கடமையாகும்.
குழந்தைப் பருவம் என்பது குழந்தைகளுக்கு இயற்கையாகவே அமைந்திட்ட உரிமையாகும். அந்த உரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் புறம்பானது என்பதை கருத்தில்கொண்டு உலகெங்கும் ஜூன் 12 ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உறுதியேற்போம்! குழந்தைகள் பணிக்கு செல்வதைக் கண்டால் அவர்களை தடுத்து பள்ளிக்கு அனுப்பிவைப்போம்! குழந்தைத் தொழிலாளர் முறை எனும் சமூக அவலம் நீக்கப்பட சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதியேற்போம்!
தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கி, தங்கள் ஆதரவினை தரவேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றிடுவோம்!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம்!
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago