பணவீக்கம் அதிகரிப்பு: வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,17 - நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையொட்டி வங்கி வட்டி விகித்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதேமாதிரி டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் உயர்தத்ப்பட்டுள்ளது. இதனால் லாபம் அடையக்கூடியவர்கள் வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்கள்தான். கடன் வாங்கியிருப்பவர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். 

நாட்டில் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசிகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டது. இதைத்தடுக்கும் வகையில் வங்கிகளில் குறுகிய காலக்கடன்களுக்கான வட்டி வகித்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாக இருந்தது 7.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களும் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வங்கி டெபாசிட்களுக்கு 6.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 6.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பங்கு சந்தையில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. மொத்த புள்ளிகள் 18 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டது. அதேசமயத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.124 அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கயெல்லாம் ஒரு பயனும் அளிக்கப்போவதில்லை. நாட்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் தேவையான பொருட்களின் உற்பத்தியை குறைந்த செலவில் அதிகரித்தால்தான் நாட்டில் பணவீக்கத்தை குறைக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: