முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் திருட்டு சம்பவம்: மதுரை அரசு மருத்துவமனை நர்சுகளிடம் போலீசார் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.- 20 - மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு தொடர்பாக நர்சுகளிடம் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2010 ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி தோப்பூரை சேர்ந்த ஜெயக்குமாரின் மனைவி லதா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை பணியாளர் அமராவதி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே மருத்துவமனையில் புரோக்கராக செயல்பட்ட சுப்பிரமணி, மருத்துவமனை ஊழியர் அமுதவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மருத்தவமனையில் வேலை பார்த்து வரும் நர்சுகளிகளிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவ வார்டில் பணியாற்றிய ஒவ்வொரு நர்சுகளையும் தனி அறைக்கு  அழைத்து பெண் போலீசாரின் உதவியுடன் போலீசாரும், மருத்துவமனை உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

   இந்த விசாரணையின் போது அவர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து குழந்தை திருட்டு வழக்கில் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் தொடர்நது போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்