பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      வர்த்தகம்
India Budget1

 

புதுடெல்லி,பிப்.28 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும். 

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்தநிலையில் இன்று பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை ,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது. 

மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.6 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பல சலுகைகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த துறையில் ரூ.20 ஆயிரம் வரை முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.  இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அளவு 4.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம். நேரடி வரிவிதிப்பு விதிமுறையில் வருடாந்திரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில்  மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: