மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Budget1

 

புதுடெல்லி, மார்ச் 1 - மத்திய அரசின் பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எக்சைஸ் வரி 10 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல சென்வாட் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி  நபர் வருமான வரி உச்சவரம்பு  தற்போதுள்ள ரூ. 1.60 லட்சத்திலிருந்து ரூ. 1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50  லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் வரை  வருமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.

*  உள்நாட்டு கம்பெனிகளுக்கான  சர்சார்ஜ் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

* சிறு வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய வருமான வரி கணக்கு படிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

*  குறைந்தபட்ச மாற்று வரி 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* சேவை வரி 10 சதவீதமாகவே நீடிக்கும்.

*  மாற்றி அமைக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரிகள் மூலம் ரூ.7300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்

*  இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* 130 பொருட்களுக்கு 1 சதவீத மத்திய எக்சைஸ் வரி தொடர்ந்து நீடிக்கும்.

* அத்யாவசிய உணவு பொருட்கள், எரிபொருள்,  விலை உயர்ந்த கற்கள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் இந்த வரியிலிருந்து  விலக்கு அளிக்கப்படும்.

*  விவசாய இயந்திரங்களுக்கான கஸ்டம்ஸ் வரி 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 1000 வசூலிக்கும் ஓட்டல்கள்  சேவை வரிக்குள் கொண்டு வரப்படும். மதுபானம் பரிமாறும் ஏ.சி.ரெஸ்டாரண்டுகள்,சில குறிப்பிட்ட மருத்துவ மனைகள், சில நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவையும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.

* உள்நாட்டு விமான பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 50 ம்  சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.250 ம் சேவை வரி உயர்த்தப்படுகிறது.

* உயர் வகுப்பு விமான டிக்கெட்டுகளுக்கு (உள் நாடு மற்றம் வெளி நாடு ) 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.

மானியங்கள்:

* உணவு மானியங்களுக்கு ரூ. 60,570 கோடி .

*  உரத்திற்கு ரூ.50,000 கோடி.

* பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம்  ரூ.23,640 கோடி.

* எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி ரொக்க மானியம்.

* 2011-12 ம்  ஆண்டிற்கான மொத்தச் செலவு 12.55 லட்சம் கோடி

* இதில் திட்டச் செலவுகள் 4.48 லட்சம் கோடி

வருமானம்

* ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ. 9.32 லட்சம் கோடி 

* வரி அல்லாத வருமானம் ரூ.1.25 லட்சம் கோடி 

* கம்பெனி வரிகள் மூலமாக வருவாய் ரூ. 3.6 லட்சம் கோடி.

பங்கு விலக்கல்

* 2011-12 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கு ரூ. 40,000 கோடியாக இருக்கும்.

* பொதுத்துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

* மொத்த கடன்கள் ரூ. 3.45 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ. 3.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

* அன்னிய நேரடி முதலீடு கொள்கை தளர்த்தப்படுகிறது. 

* உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி இல்லாத பத்திரங்கள் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வெளியிடப்படும்.

* இந்த ஆண்டு உணவு பாதுகாப்பு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும்.

* கடன் மேலாண்மை அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.

* பொது கடன் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.

* காப்பீட்டு ஓய்வூதிய நிதியங்கள் தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும். 

* புதிய கம்பெனிகள் மசோதா, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். 

* 2011-12 ஆம் ஆண்டுக்கு ராணுவ செலவுகளுக்காக ரூ. 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி ரூ. 18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* மாநில அரசுகளால் நடத்தப்படும் வங்கிகளுக்கு ரூ. 20,150 கோடி வழங்கப்படும்.

* கல்வித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ரூ.26,760 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* தேசிய திறன்மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு.

* பாரத் நிர்மான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான சம்பளம் உயர்த்தப்படும்.

* சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: