முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினர் குட்டக்குட்ட குளிய வேண்டாம் - வீரமணி

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.1 - குட்டக்குட்ட குளிய வேண்டும் என்று தி.மு.க.விற்கு தி.க.தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கருணாநிதி தலைமையில் ஐந்தாவது முறை நடைபெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சமானிய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பற்ற ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கூட்டணி என்ற ஒன்றைக்காட்டி, தசாதனிடம் கைகேயி வரம் பெற்றதாக இராமாயணக் கதையில் வரும் நிகழ்வைப்போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்துவிட்டதுபோல் கற்பனை குதிரைகள் மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க. இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளை சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல, அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில  நீந்திவந்த ஓர் ஜனநாயக பீனிக்ஸ் பறவை.

எனவே குட்டக்குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மானத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியமாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும். நட்பு பேசிக்கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல, கூட்டணி அரசியலில், நான் உமி கொண்டு வருவேன், நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?

1980-ல் இப்படிவிட்டு கொடுத்து கெட்டுப்போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago